Home உலகம் சீனா: படகு மூழ்கிய விபத்தில் 22 பேர் பலி

சீனா: படகு மூழ்கிய விபத்தில் 22 பேர் பலி

497
0
SHARE
Ad

ஷாங்காய், ஜனவரி  18 – படகு மூழ்கிய விபத்தில் 22 பேர் பலியான சோக சம்பவம் சீனாவில் நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஜியாங்சு மாகாணத்தில், யாங்சே நதியில் சென்றபோது அந்தச் சிறிய ரக படகு விபத்துக்குள்ளானது.

தொடக்கத்தில் இந்த விபத்து காரணமாக 21 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பின்னர் கப்பலின் மாலுமிகளுக்கான பகுதியில் இருந்து மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டது.

China tug boat capsizes

#TamilSchoolmychoice

சீனாவின் படகு விபத்தில் மீட்கப்பட்ட சடலங்களுடன் சீன மீட்புப் படையினர்….

விபத்துக்குள்ளான 40 மணி நேரத்திற்குப் பிறகு அந்தப் படகை மீட்டுள்ளனர். சோதனை முயற்சியின் பொருட்டு மொத்தம் 25 பேர் அந்தப் படகில் பயணித்துள்ளனர். இவர்களில் 8 பேர் வெளிநாட்டுப் பயணிகள் ஆவர்.

அப்போது திடீரென அப்படகு மூழ்கியது. இதில் 3 பேர் மட்டும் மீட்கப்பட்டனர். படகு மூழ்கியதில் பலியான அனைவருமே ஆடவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.

China tug boat capsizes rescue

விபத்துக்குள்ளான படகையும் பயணிகளையும் மீட்கப் போராடும் சீன மீட்புப் படையினர்…

இந்த விபத்தின்போது அப்படகில் பயணம் செய்த மலேசியர் ஒருவரைக் காணவில்லை என வெளியுறவு அமைச்சு உறுதி செய்துள்ளது.

அவரைப் பற்றிய கூடுதல் விவரங்களை ஷாங்காயில் உள்ள மலேசியத் தூதரகம் வழி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே அப்படகில் பயணம் செய்த மலேசியரின் பெயர் சியோங் கின் சின் என சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

படங்கள்: EPA