Home நாடு மன்னர் மன்னன் புதல்வர் காலமானார்!

மன்னர் மன்னன் புதல்வர் காலமானார்!

530
0
SHARE
Ad

condolences image

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 18 – மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத் தலைவர்களில் ஒருவரும், பல இந்திய சமூக, இயக்கங்களில் ஈடுபாடு கொண்டவரும், மலாயாப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமான மன்னர் மன்னனின் புதல்வர் இளவரசன், டெங்கி காய்ச்சல் காரணமாக இன்று அகால மரணமடைந்தார்.

மரணமடைந்த இளவரசனின் இறுதிச் சடங்குகள், நாளை திங்கட்கிழமை ஜனவரி 19ஆம் தேதி கீழ்க்காணும் முகவரியில் காலை 10.00 மணிக்கு நடைபெறும்:-

#TamilSchoolmychoice

எண் 10, ஜாலான் 4/41, 

46050 பெட்டாலிங் ஜெயா

(பெட்டாலிங் ஜெயா ஓல்ட் டவுன் சந்தைக்கு அருகில்)

இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் இளவரசனின் நல்லுடல் டாமன்சாரா மயானத்திற்கு இறுதி ஈமக் கிரியைகளுக்காக கொண்டு செல்லப்படும்.

தனது அன்புப் புதல்வரை இழந்து வாடும் மன்னர் மன்னனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.