Home இந்தியா மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி – ஜெயலலிதா திடீர் சந்திப்பு!

மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி – ஜெயலலிதா திடீர் சந்திப்பு!

602
0
SHARE
Ad

Jaitley-Jayalalithaa-PTIசென்னை, ஜனவரி 20 – தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும், மரியாதை நிமித்தமாகவே அவர், ஜெயலலிதாவை சந்தித்ததாகவும் பா.ஜ.க வட்டாரங்கள் கூறுகின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, தீர்ப்பிற்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பான வழக்கு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி,ஜெயலலிதாவை சந்தித்து பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

jaya-arun-jetleyஇது பற்றி அதிமுக வட்டாரங்கள் கூறுகையில், “அதிமுகவிற்கு மக்களவையில் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர்.

நாடாளுமன்ற தீர்மானங்கள் மற்றும் விவாதங்களில் இவர்களின் ஒத்துழைப்பு குறித்து பேசுவதற்காகவே ஜெயலலிதாவை அருண் ஜெட்லி சந்தித்து பேசினார்” என்று கூறியுள்ளனர்.

எனினும், ஜெயலலிதா சந்தித்து விட்டு வெளியே வந்த அருண் ஜெட்லி, இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

karunanidhiஜெயலலிதா – அருண் ஜெட்லி சந்திப்பு குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை மத்திய அமைச்சர், அவருடைய வீட்டிற்கே சென்று சந்தித்து பேசியிருக்கிறார்”.

“தந்தை பெரியார் அடிக்கடி கூறும் ‘பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது’ என்ற சொற்றொடரே தற்போது நினைவிற்கு வருகின்றது” என்று தெரிவித்துள்ளார்.