அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவ கல்லூரியின் மருந்தியல் பேராசிரியர் ஸ்காட் சாலமன் தலைமையிலான குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அமெரிக்காவில் 45 முதல் 64 வயதுக்குப்பட்ட 14,629 பேரிடம் இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களுக்கு வாரத்தின் 7 நாட்களும் தினமும் 350 மி.லி அளவு பீர் கொடுத்து சாப்பிட செய்தனர்.
அவர்களில் டீ குடிப்பவர்களை விட பீர் குடிப்பவர்களில் ஆண்களில் 20 சதவீதம் பேருக்கும், பெண்களில் 16 சதவீத பேருக்கும் குறைவாகவே மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது.