Home இந்தியா என் மீதான புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது – தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!

என் மீதான புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது – தயாநிதிமாறன் குற்றச்சாட்டு!

593
0
SHARE
Ad

dayanidhi-maranசென்னை, ஜனவரி 22 – தனது தனிச் செயலாளராக இருந்தவரும், சன் தொலைக்காட்சி ஊழியர்களும் கைது செய்யப்பட்டிருப்பதும், என் மீதான புகாரும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய தயாநிதி மாறன், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் தன் மீதான பொய் புகார்களுக்குக் காரணம் என்று அவர் நேரடியாகக் குற்றம்சாட்டினார்”.

மேலும் அவர் கூறியதாவது, “என் மீதான புகார்கள் அனைத்தும் பொய்யானவை. அரசியல் உள்நோக்கம் கொண்டது. எனது வீட்டுக்கும், சன் தொலைக்காட்சிக்கும் 300 தொலைபேசி இணைப்புகள் இருந்ததாகக் கூறுவது தவறு”.

#TamilSchoolmychoice

“எனக்கும் சன் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சன் தொலைக்காட்சியில் தொலைபேசி இணைப்புகள் பயன்படுத்தப்பட்டன என்று கூறினால்தான் என்னை சிக்க வைக்க முடியும் என்று இப்படி பொய்ப் புகார் கூறப்பட்டுள்ளது”.

“1 கோடி அளவுக்கு தொலைபேசி பயன்படுத்தியதில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. இது ஒரு சிவில் குற்றம். இதற்காக நோட்டீஸ் அனுப்பினால், அந்த தொகையை அபராதத்துடன் சேர்த்துக் கட்டத் தயாராக இருக்கிறேன்” என்றும் கூறினார் தயாநிதிமாறன்.