Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் அமேசான் அசுர வளர்ச்சி! 

இந்தியாவில் அமேசான் அசுர வளர்ச்சி! 

593
0
SHARE
Ad

amazon_india_wide_imageபுது டெல்லி, ஜனவரி 22 – ‘அமேசான் இந்தியா’ (Amazon India) நடப்பு நிதியாண்டில் 2 பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை நோக்கி அசுர வேகத்தில் வளர்ந்து வருகின்றது.

இதன் மூலம் அமெரிக்காவின் முன்னணி இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், தனது தடத்தை இந்தியாவிலும் ஆழப் பதித்துள்ளது நிரூபணமாகிறது.

2 பில்லியன் டாலர்கள் என்ற இந்த வர்த்தக இலக்கை இந்தியாவின் மற்ற முன்னணி நிறுவனங்களான ‘ஃப்ளிப்கார்ட்’ (Flipkart) மற்றும் ‘ஸ்நாப்டீல்’ (Sanpdeal) இதற்கு முன் எட்டி உள்ளன.

#TamilSchoolmychoice

மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில், அமேசான் நிறுவனம் இந்தியாவில் தனது இணைய வர்த்தகத்தை கடந்த 2013-ம் ஆண்டே தொடங்கியது.

ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவான நாட்களே ஆன நிலையில், அமேசான் வரும் மார்ச் மாதத்திற்குள் 2 பில்லியன் டாலர்கள் வர்த்தக சாதனையை நிகழ்த்த இருப்பது மிகப் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமேசான் நிறுவனம் இதுவரை தனது வர்த்தகம் பற்றி ஊடகங்களில் வெளிப்படையாக பகிர்ந்து கொண்டதில்லை. எனினும், அமேசான் வர்த்தக பிரதிநிதிகளிடம் நடத்தப்பட்ட விவாதத்தில், நடப்பு நிதியாண்டில் அமேசான் இதுவரை 1.51 பில்லியன் டாலர்கள் வர்த்தகத்தை நிகழ்த்தி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறுகிய கால இடைவெளியில் அமேசான் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் அதிக வர்த்தக இலக்கை அடைவதற்கு முக்கிய காரணம், அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சிறப்பான சலுகைகளாகும். விழாக்காலங்களில் அமேசான் வழங்கும் சலுகைகள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

மற்ற நாட்களை விட விழாக் காலங்களில் அமேசான் வர்த்தகம் 50 சதவீதம் அதிக வளர்ச்சியை சந்தித்து வருவதாக அமேசான் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “அமேசான் சமீபத்தில் வழங்கிய ‘Online Shopping Dhamaka’ விற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.

இது எங்கள் நிறுவனத்திற்கு மேலும் ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது. 2019-ம் ஆண்டிற்குள் நிறுவனத்தின் வர்த்தகத்தை 23 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்த்த முடிவு செய்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இணைய வர்த்தகத்தில் அமேசான் தவிர, ப்ளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்டீல் நிறுவனமும் முன்னிலை வகித்து வருகின்றன. 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ப்ளிப்கார்ட் நிறுவனம்,

2016-ம் ஆண்டு முடிவிற்குள் 5 பில்லியன் டாலர்களும், ஸ்நாப்டீல் நிறுவனம் 3 பில்லியன் டாலர்கள் அளவிற்கும் வர்த்தகத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.