Home இந்தியா திமுக வெற்றிக்கு சரவணன் வாழ்த்து! தயாநிதி மாறனை நேரில் சந்தித்தார்!

திமுக வெற்றிக்கு சரவணன் வாழ்த்து! தயாநிதி மாறனை நேரில் சந்தித்தார்!

270
0
SHARE
Ad
சரவணன் – தயாநிதி மாறன் – ஹானிபா

சென்னை : நடந்து முடிந்த இந்தியப் பொதுத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் கூட்டணியாக வெற்றி வாகை சூடிய திமுகவுக்கும் அந்தக் கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தன் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தனது வாழ்த்துகளை அவர் தன் முகநூலில் பதிவிட்டார்.

தற்போது தமிழ்நாட்டிற்கு வருகை மேற்கொண்டிருக்கும் மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், தனது குழுவினருடன் மத்திய சென்னை தொகுதியில் வெற்றி பெற்ற தயாநிதி மாறனையும் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். ஜூன் 5-ஆம் தேதி இந்த சந்திப்பு நடைபெற்றது.

திமுக வேட்பாளராக மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தயாநிதி மாறன் 244,689 வாக்குகள் பெரும்பான்மையில் பாஜக வேட்பாளரைத் தோற்கடித்தார்.

#TamilSchoolmychoice

தயாநிதி மாறனுடனான சந்திப்பில், சரவணனுடன் மாஹ்சா பல்கலைக் கழக வேந்தர் செனட்டர் டான்ஸ்ரீ டாக்டர் ஹானிபாவும் கலந்து கொண்டார்.  திரு விவேகானந்தா, திரு.ஆறுமுகம், திரு.வி.பி.குமார், டத்தோ சுரேஷ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.