Home பொது ப.அ.சிவம் மறைவு- சிறந்த படைப்பாளரையும் பண்பாளரையும் இழந்தோம்- தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் இரங்கல்

ப.அ.சிவம் மறைவு- சிறந்த படைப்பாளரையும் பண்பாளரையும் இழந்தோம்- தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் இரங்கல்

822
0
SHARE
Ad

sivam-sliderகோலாலம்பூர், பிப்.28- அமைச்சர் டாக்டர் சுப்ரமணியத்தின் பத்திரிக்கை செயலாளராக பணியாற்றி மிக இளவயதில் அகால மரணமுற்றார் ப.அ.சிவம்.

“ப.அ.சிவம் அவர்களின் மறைவு, மலேசிய தமிழ் எழுத்துலகிற்கும், தமிழ் புது கவிதை உலகிற்கும் பேரிழப்பாகும்” என்று தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் இராஜேந்திரன் கூறினார்.

மிகவும் இளவயதில் எனது தலைமையின் கீழ் மலேசிய எழுத்தாளர் சங்கத்தில் உதவி தலைவராக பணியாற்றிவர் சிவம். மிகச் சிறந்த இலக்கியவாதியாகவும் படைப்பாளராகவும் திகந்த அவர், பிறரிடம் பழகுவதில் சிறந்த பண்பாளராகவும் திகந்தார்.

#TamilSchoolmychoice

மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பல புதுக்கவிதை கருத்தரங்கில் கலந்துக் கொண்டு புது கவிதைகளையும் அரங்கேற்றியுள்ளார்.

பின்னர், நவீன எழுத்துலகில் எழுத்தாளர்களில் மிக முக்கியமாகத் திகந்த அவர் தனது படைப்புகள் வித்தியாசமாக அமைய வேண்டும் என்று பாடுப்பட்டவர்.

அவர் மறைவு குறித்து, மலேசிய எழுத்தாளர் சங்கம் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்துக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று திரு.ராஜேந்திரன் கூறினார்.