Home அரசியல் சிலாங்கூர் மந்திரி புசார் மீது முதியவர்கள் வழக்கு

சிலாங்கூர் மந்திரி புசார் மீது முதியவர்கள் வழக்கு

775
0
SHARE
Ad

kalidஷா ஆலம், பிப்.28-  சிலாங்கூர் அரசாங்கம் மற்றும் மந்திரி புசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கு எதிராக 1,001 முதியவர்கள் தனி நபர்  ஒருவருக்கு 2,500 வெள்ளி மதிப்புடைய தக்காஃபுல் காப்புறுதி கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று வழக்கு பதிவு செய்தனர்.

இங்குள்ள கமாருடின்  அண்ட் பார்ட்னஸ் வழக்கறிஞர் நிறுவன அலுவலகத்தில் நேற்று காலை மணி 9.40க்கு இவ்வழக்கை பதிவுச் செய்தனர்.

கெஅடிலான், ஐசெக மற்றும் பாஸ் ஆகியவற்றினால் அமைக்கப்பட்டுள்ள சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை முதலாவது பிரதிவாதியாகவும் காலிட்டை இரண்டாவது பிரதிவாதியாகவும் இவ்வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது இம்மூன்று கட்சிகளும் தக்காஃபுல் கட்டணத்தைச் செலுத்துவதாக வாக்குறுதிகள் அளித்ததாக வாதி தரப்பு தலைவரான அகிருடின் அப்துல் ரஷிட் கூறினார்.

முதலாவது பிரதிவாதியின் தேர்தல் கொள்கை அறிக்கை மீது தங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததாகவும் அறுபது வயதைக் கடந்தவர்கள் இச்சலுகையைப் பெறுவர் என்று வாக்குறுதி அளித்ததாகவும் அவ்வழக்கு மனுவில் தெரிவித்தனர்.

தொடர்ந்து, தக்காஃபுல் கட்டணத்தைச் செலுத்துவதை பற்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததன் காரணத்தால், தனது அதிகாரத்தை காலிட் தவறாக பயன்படுத்தியதாகவும் அவர்கள் கூறினர்.