Home நாடு ‘மலேசியாவில் இந்திய விழா 2015’ – தேசிய அளவில் கலை, கலாசார நிகழ்வுகள்!

‘மலேசியாவில் இந்திய விழா 2015’ – தேசிய அளவில் கலை, கலாசார நிகழ்வுகள்!

628
0
SHARE
Ad

Festival of India 2015கோலாலம்பூர், ஜனவரி 23 – கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம் முதல் முறையாக ‘மலேசியாவில் இந்திய விழா 2015’ என்ற நிகழ்வை வரும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடத்தவுள்ளது.

IMG_7003

இந்த விழாவில் பரதநாட்டியம், நாடகம், பஞ்சாப் மற்றும் குஜராத் நடனங்கள், டிஜிட்டல் இந்தியா கண்காட்சி, பாலிவுட் ஒலி மற்றும் ஒளி கண்காட்சி, சோழ ஆலயங்கள், இஸ்லாம் கலை & கலாசாரம், இந்தியா -மலேசியா முக்கிய பிணைப்புகள், மலையாள திரைப்படவிழா, மாம்பழ திருவிழா, கல்வி கண்காட்சி மற்றும் பாரம்பரியம் கலாசாரம் பற்றிய வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

#TamilSchoolmychoice

‘மைஃபெஸ்ட் 2015’ என்ற விழாவுடன் இணைந்து ‘மலேசிய இந்திய விழா 2015’ -ம் நடத்தப்படவுள்ளது.

இது குறித்து நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி, இந்த விழாவை சிறப்பாக நடத்த தாங்கள் மலேசிய சுற்றுலா மற்றும் கலாசார துறையுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

IMG_7018

(இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி)

மேலும், இந்திய கலாசாரம் பற்றிய ஒவ்வொரு முக்கிய கூறுகளும், அம்சங்களும் இந்த விழாவில் இடம்பெறும் என்றும், மலேசியாவில் வாழும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த இந்தியர்களின் கலாசார கூறுகள் அனைத்தையும் இந்த விழா உள்ளடக்கியிருக்கும்  என்றும் திருமூர்த்தி குறிப்பிட்டார்.

இதுதவிர, மலையாள திரைப்பட விழா, உணவுத் திருவிழா, அனைத்துலக யோகா தினம் மற்றும் தமிழ் இலக்கிய விழா ஆகியவற்றோடு, கண்காட்சிகளும் மலேசியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள உள்ள முக்கிய நகரங்களில் ஏற்பாடு செய்யும் திட்டம் இருப்பதாகவும் திருமூர்த்தி கூறினார்.

IMG_7027

(துணை இந்தியத் தூதர் டாக்டர் அக்கி னோ விமல்)

கோலாலம்பூர் மட்டுமின்றி ஈப்போ, ஜார்ஜ் டவுன், சுங்கைப்பட்டாணி, சிரம்பான், மலாக்கா, ஜோகூர் பாரு, கோத்தா பாரு, கூச்சிங் மற்றும் கோத்தா கினபாலு ஆகிய நகரங்களிலும் இந்த விழா நடைபெறவுள்ளது.

இந்த வருடம் மலேசியாவில் இந்திய விழாவோடு சேர்த்து, இந்திய கலாசார மையத்தின் 5-வது ஆண்டு விழாவையும் இந்தியத் தூதரகம் சிறப்பாகக் கொண்டாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கலாச்சாரப் பிரிவாக இந்த இந்தியக் கலாச்சார மையம் செயல்பட்டு வருகின்றது.

இந்த செய்தியாளர் கூட்டத்தில் இந்திய தூதரக துணை ஆணையர் டாக்டர் அக்கினோ விமலும் கலந்து கொண்டு விழா குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Festival of India Logo