Home கலை உலகம் விஜய்க்காக புதுமாதிரியான கதையை தயார் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

விஜய்க்காக புதுமாதிரியான கதையை தயார் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!

728
0
SHARE
Ad

vijayசென்னை, பிப்.28- ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வெளியான படம் துப்பாக்கி.

இநத படம் வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு, விஜய்யின்  மாறுபட்ட படமாகவும் அமைந்தது.

அதனால் இனி தான் நடிக்கிற ஒவ்வொரு படமும் அந்த அளவுக்கு பிரமாண்டமான படங்களாகவும், பெரிய வசூலை ஈட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டே புதிய படங்களை  தேர்வு செய்கிறார் விஜய்.

#TamilSchoolmychoice

அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் தலைவா படமும் 100 கோடியில்  தயாராகி வருகிறது.

அதோடு, படத்தை இந்தியில் வெளியிடும் நோக்கத்தில் பாலிவுட் நடிகை ராகினியையும் இப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

இந்தப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்க இருப்பதாக தற்போது புதிய செய்தி வெளியாகியுள்ளது.

இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது இந்தியில் துப்பாக்கியை இயக்கி வரும் நான், அடுத்த படத்தை தமிழில் விஜய்யை வைத்து இயக்குகிறேன்.

ஆனால் அந்த படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்காது. இதுவரை விஜய் நடிக்காத புதுமையான கதையாகவும், இதுவரை விஜய்யை பார்த்திராத கோணத்தில் ரசிகர்கள் பார்க்கும் மாதிரியான புது மாதிரியான படமாகவும் அது இருக்கும் என்று  முருகதாஸ் கூறினார்.