Home கலை உலகம் பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்!

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்!

579
0
SHARE
Ad

Image3_1_1_Bhairavi_SunTV-Inner-banner3சென்னை, ஜனவரி 24 –  பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90.

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்தக்கால நடிகர்களுடன் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியவர் நடிகர் வி.எஸ்.ராகவன்.

பின்னர், ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டவர்களுடன் நடித்ததோடு, இந்த கால விமல், விஜய் சேதுபதி வரை சுமார் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சுமார் 1000 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சென்னை, தி.நகரில் வசித்து வந்த ராகவன் உடல்நலம் சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று மாலை அவரது உயிர் பிரிந்தது.