புதுடில்லி, ஜனவரி 26 – டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் புகழ்பெற்ற கேலிச்சித்திரங்களை (கார்ட்டூன்ஸ்) வரைந்து புகழ் பெற்ற இந்தியாவின் பிரபலமான கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மண் (படம்) இன்று தனது 94வது வயதில் காலமானார்.
அவரது உடல் உறுப்புகளின் செயலிழப்பு மற்றும் முதுமை காரணமாக அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“தெ கொம்மன் மேன்” (‘common man’) என்ற தலைப்பில் இந்தியாவின் சாதாரண மனிதன் ஒருவனின் பார்வையில் அரசியல், சமூக சம்பவங்களை கேலியும், கிண்டலும் கலந்த கேலிச் சித்திரங்களாக நீண்ட காலமாக வரைந்து புகழ் பெற்றவர் லக்ஷ்மண்.
பூனாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து இன்று அவர் காலமானார்.
லக்ஷ்மண் மைசூரில் பிறந்தவர். அவரது மூத்த சகோதரர் ஆர்.கே.நாராயணன் பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஆவார்.
லக்ஷ்மண் வரைந்த கார்ட்டூன்களில் சில:
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து ஆர்.கே.லக்ஷ்மண் வரைந்த கார்ட்டூன்: