Home கலை உலகம் நடிகை ரம்பா வீட்டில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

நடிகை ரம்பா வீட்டில் ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

1039
0
SHARE
Ad

rambha_actress_hot_stills__104_ஐதராபாத், பிப்ரவரி 4 – பிரபல நடிகையான ரம்பா வீட்டில் 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. தனது மனைவி குடும்பத்தினர் நகைகளை திருடி இருக்கலாம் என ரம்பாவின் சகோதரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை ரம்பா. ‘உள்ளத்தை அள்ளித்தா’, சுந்தரபுருஷன், செங்கோட்டை, அருணாச்சலம், வி.ஐ.பி., காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். 2010-ல் கனடா தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்ட ரம்பா, தற்போது கணவருடன் டொரண்டோவில் வசித்து வருகிறார். தற்போது தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் ரம்பா இருந்து வருகிறார்.

#TamilSchoolmychoice

ரம்பாவுக்கு சென்னையிலும், ஐதராபாத்திலும் வீடுகள் உள்ளன. இதில் ஐதராபாத் வீட்டில் தனது நகைகளை பீரோவில் பூட்டி வைத்துள்ளார் ரம்பா. அந்த நகைகள்தான் தற்போது கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டில் ரம்பாவின் அண்ணன் வசித்து வருகிறார். அவர் வெளியே சென்றபோது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் நகைகளையும், ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து விட்டு சென்றுவிட்டனர்.

இது குறித்து ரம்பா சகோதரர் சீனிவாஸ் போலீசில் புகார் அளித்தார். தனது மனைவி குடும்பத்தினர் நகைகளை திருடி இருக்கலாம் என சந்தேகிப்பதாக புகாரில் தெரிவித்து உள்ளார்.

அந்த புகார் மனுவில், எனது தங்கை ரம்பாவின் நகைகளை வீட்டில் வைத்து இருந்தேன். அவற்றை காணவில்லை. கொள்ளை போன நகைகளில் மதிப்பு ரூ.4.5 கோடி. நகைகளை என் மனைவி பல்லவி குடும்பத்தினர் திருடி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

பல்லவியுடனும், அவரது குடும்பத்தினருடனும் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. ஏற்கனவே அவர்கள் ரம்பா மீதும் என் மீதும் பொய் புகார் அளித்து இருந்தனர். என்னிடம் ரூ.1 கோடி கேட்டு நிர்பந்தமும் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில்தான் ரம்பாவின் நகைகள் காணாமல் போய் உள்ளன.  திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ரம்பாவுக்கும், பல்லவிக்கும் கடந்த வருடம் மோதல் ஏற்பட்டது. ரம்பாவும், சீனிவாசும் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் பல்லவி புகார் அளித்திருந்தார்.