Home கலை உலகம் சிம்புவுக்கு அக்காவாக ரம்பா !

சிம்புவுக்கு அக்காவாக ரம்பா !

1464
0
SHARE
Ad

ramba_055

அக் 17-ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ரம்பா.  நடிகை ரம்பா ‘உழவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இருந்தாலும், ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம் அவருக்கு நடிகை என்ற உயர்ந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்குப்பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ரம்பா, தற்போது நடிகர் சிம்புவுக்கு அக்காவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதன்மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் இறங்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

இனிமேல், அக்கா, அண்ணி போன்ற நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கப் போவதாகவும் ரம்பா தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு படத்தின் மூலம் ஒப்பந்தம் கொடுக்கவிருக்கிறாராம். இருப்பினும், ரம்பா நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை.