Home கலை உலகம் நடிகை ரம்பா வீட்டில் நகை எதுவும் திருடு போகவில்லை – ரம்பாவின் சகோதரர்!

நடிகை ரம்பா வீட்டில் நகை எதுவும் திருடு போகவில்லை – ரம்பாவின் சகோதரர்!

941
0
SHARE
Ad

actress rambha,ஐதராபாத் , பிப்ரவரி 4 – பிரபல தமிழ் நடிகை ரம்பாவின் சகோதரர், தங்கள் வீட்டில் இருந்து ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் திருடு போகவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ரம்பாவின் ஐதராபாத் வீட்டில் இருந்து சுமார் ரூ.4.5 கோடி மதிப்புள்ள நகைகள் திருடுபோயுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து ரம்பாவின் ஐதராபாத் வீட்டில் வசித்து வரும் அவரது சகோதரர் கூறுகையில்,

“இந்த நகை திருட்டு போனதாக வெளியாகியுள்ள செய்தி பழைய செய்தியாகும். ஏற்கனவே இந்த வழக்குபற்றி சென்னை மற்றும் ஐராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் போலிசார் விசாரணை நடந்திவருகின்றனர்”.

#TamilSchoolmychoice

“மேலும், ஐதராபாத்தில் நடந்த விசாரணை பற்றிய செய்தியை தவறாக புரிந்து கொண்டு தற்போது நகைகள் திருடுபோயுள்ளதாக சிலர் செய்தி வெளியிட்டுள்ளனர் என்றும் எங்கள் வீட்டில் நகை எதுவும் திருடு போகவில்லை எனவும்” தெரிவித்துள்ளார்.