Home இந்தியா டெல்லி சட்டமன்ற தேர்தல்: கிரண் பேடி கண்ணீர் மல்க பிரச்சாரம்!

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கிரண் பேடி கண்ணீர் மல்க பிரச்சாரம்!

528
0
SHARE
Ad

Tamilடெல்லி, பிப்ரவரி 4 – டெல்லியில் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி, மாநிலத்தில் சிறந்த ஆட்சியை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தல் வரும் 7-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ளதால், அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட பா.ஜ.க முதல்வர் வேட்பாளர் கிரண்பேடி, மக்களின் உற்சாக வரவேற்பை கண்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.

#TamilSchoolmychoice

Elections rally in Indiaகண்களில் நீர் ததும்பிய நிலையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் டெல்லி மக்களின் இந்த பேரன்புக்கு ஆட்சி பொறுப்பேற்ற பின் நலத்திட்டங்கள் மூலம் கைமாறு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளை நிறைவடைய உள்ள நிலையில் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவாலை தாக்கி பேசினார்.

Elections rally in Indiaகட்சிக்கு நிதி வசூலித்த விவகாரத்தில் சிக்கியுள்ள கெஜ்ரிவால், மக்களை திசை திருப்பி ஏமாற்ற முயல்வதாக கிரண்பேடி குற்றம்சாட்டினார்.

எப்போதும் ஊடகங்களில் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பேசுபவர் கெஜ்ரிவால் என்றும், ஆனால் செயல் ஒன்றையே நம்புபவர் தாம் என்றும் அவர் கூறினார்.