இந்த பழக்கத்தை சிறுவயதிலேயே நிறுத்தாவிட்டால், பிற்காலத்தில் உடலில் பிரச்சனைகள் ஏற்படுபட அதிக வாய்ப்புள்ளது. இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாவிட்டாலும், அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.
இப்போது நகம் கடிக்கும் பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை பார்க்கலாம். நகங்களைக் கடிப்பதால் நகங்களைச் சுற்றியுள்ள சருமமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும்.
எப்போதும் வாயில் கையை வைத்தவாறு இருப்பதால், அப்பகுதியில் இரத்தக்கசிவு மற்றும் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கும். நகங்களை கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்குகிறார்கள்.
இப்படி விழுங்குவதால், செரிமான அமிலத்தால் அவை செரிமானம் ஆகாமல், வயிற்றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.
இதனால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படும். தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்து, பற்களை வலி இழக்க செய்துவிடும்.
எனவே நகங்கள் கடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை உடனே நிறுத்துங்கள். இல்லாவிட்டால், விரைவில் பற்களையும் இழக்க நேரிடும்.