Home உலகம் டிரான்ஸ் ஏசியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு! (படங்களுடன்)

டிரான்ஸ் ஏசியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 12-ஆக உயர்வு! (படங்களுடன்)

512
0
SHARE
Ad

TransAsia Airwys plane crashes into riverதைப்பே, பிப்ரவரி 4 – தைவானில் டிரான்ஸ் ஏசியா விமானம் ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழனர். தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் உள்ள சங்சான் விமான நிலையத்தில் இருந்து டிரான்ஸ் ஏசியா ATR 72-600 ரக விமானம் புறப்பட்டு சென்றது.

விமானத்தில் விமானிகள் இரண்டு பேர் உள்பட 58 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தைபே நகருக்கு வெளியே பாலம்  ஒன்றில் மோதி, கீலங் ஆற்றுக்குள் விழுந்தது. விமானத்தின் இடது புற இறக்கை சாலையில் சென்ற வாகனத்தின் மீது மோதியுள்ளது.

TransAsia Airways plane crashes into riverவிமானம் விழுந்ததை அடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விமான விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பட்டனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே விமானம் விழுந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  தீயணைப்பு படையினர், காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்து குழுக்கள் உதவிபொருட்களுடன் சம்பவ இடத்தில் நிற்கவைக்கப்பட்டுள்ளது.

விமானம் மோதிய வாகனத்தின் ஓட்டுநரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தைவானில் காலையில் நடைபெற்ற இந்தவிபத்து தொடர்பாக புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TransAsia Airways plane crashes into river, at least 8 killedவிமானம் விபத்துக்குள் சிக்கியபோது வானிலை மிகவும் சீராகவே இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான விபத்து தொடர்பாக விசாரணையும் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் டிரான்ஸ் ஏசியா விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியது இதில் 48 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

-படம் epa