Home நாடு மஇகா பிரச்சனையை தீர்க்க முன்றாம் தரப்பு தேவை – மகாதீர்

மஇகா பிரச்சனையை தீர்க்க முன்றாம் தரப்பு தேவை – மகாதீர்

489
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர், பிப்ரவரு 5 – மஇகாவில் தற்போது நிலவும் சிக்கலை மூன்றாம் தரப்பின் உதவியோடு தீர்க்க வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்துள்ளார்.

மஇகா தலைவர்கள் தங்களுக்குள் பேசி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

“மஇகாவில் எப்போதுமே பிரச்சினைகள் இருக்கும். அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க அக்கட்சியில் இல்லாதவர்கள் தேவை என நினைக்கிறேன். தங்களுக்குள் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமென்றால், மஇகா தலைவர்கள் நிச்சயமாக ஓர் உடன்படிக்கைக்கு வரமாட்டார்கள். இதற்கு முன்பும் இப்படி நடந்துள்ளது,” என்று மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மஇகா விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்படுவீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், தற்போது தாம் ஓர் அரசியல்வாதி அல்ல என்பதால், அத்தகைய பணியில் ஈடுபட முடியாது என்றார்.

“நான் தற்போது வெறும் விமர்சகர் மட்டுமே… மஇகா சிக்கலைத் தீர்க்க பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்தான் பொருத்தமான மத்தியஸ்தர்,” என்று மகாதீர் மேலும் தெரிவித்துள்ளார்.