பிணைக் கைதியாக இருந்த ஜோர்டான் விமானியை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் கூண்டில் வைத்து உயிருடன் எரித்துக் கொன்று அந்த காணொளியை, சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.
விமானிக்கு ஏதும் ஆபத்து நேர்ந்தால், அவர்கள் விடுவிக்கச் சொன்ன தீவிரவாதிகளை தூக்கிலிடுவோம் என ஜோர்டான் அரசு முன்பு எச்சரித்து இருந்தது. தற்போது அதனை செயல்படுத்தி உள்ளது.
இந்த தகவலை ஜோர்டான் அரசின் செய்தி தொடர்பாளர் முகமது அல் மொமாளி தெரிவித்துள்ளார். தூக்கிலிட்டுக் கொல்லப்பட்ட இருவரில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் விடுவிக்கச் சொன்ன சஜிதா அல் – ரிஷாவியும் ஒருவர்.
கடந்த 2005–ம் ஆண்டு அம்மானில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் சுமார் 60 பேரைக் கொன்றதற்காக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விமானி கொலை செய்யப்பட்டதற்கான காணொளி வெளியான சில மணி நேரங்களில் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.