Home இந்தியா முதலமைச்சரே இல்லாத மாநிலம் தமிழகம் – கருணாநிதி குற்றச்சாட்டு!

முதலமைச்சரே இல்லாத மாநிலம் தமிழகம் – கருணாநிதி குற்றச்சாட்டு!

550
0
SHARE
Ad

karunanithiசென்னை, பிப்ரவரி 5 – ஈழத்தமிழர் நல்வாழ்வுக்கு கிடைத்த வாய்ப்பை இழக்கும் அளவிற்கு உள்ளது முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கடிதம் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை அகதிகள் பிரச்சனையில் முதல்வர் பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டிற்கு கருணாநிதி பதிலளித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக திமுக நடத்திய போராட்டங்கள் எத்தனை தெரியுமா என்றும் பன்னீர்செல்வத்திற்கு, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சரே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். இலங்கை அகதிகள் நாடு திரும்புவதில் தமிழக அரசியலை புகுத்த வேண்டாம் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

10 சதவீத அகதிகள் மட்டுமே தமிழகத்தில் வாழ விரும்புவதாக நாளேடுகள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கருணாநிதி, விரும்பி நாடு திரும்புவோரை உரிய முறையில் மகிழ்ச்சியுடன் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.