Home இந்தியா வெளிநாடுகளுடன் நல்லுறவை பேணுவதில் சிறப்பாக செயல்படுகிறார் மோடி – பிரணாப் முகர்ஜி பாராட்டு

வெளிநாடுகளுடன் நல்லுறவை பேணுவதில் சிறப்பாக செயல்படுகிறார் மோடி – பிரணாப் முகர்ஜி பாராட்டு

522
0
SHARE
Ad

modi biranapபுதுடெல்லி,  பிப்ரவரி 9 – வெளிநாடுகளுடன் நல்லுறவை பேணுவதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாக செயல்படுவதாக பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார். உலகில் 110 நாடுகளில் உள்ள இந்திய தூதர்கள், தூதரகங்களின் உயர் அதிகாரிகள் 4 நாள் மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் 7–ஆம் தேதி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், “வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றுகிற அனைவரும் நாட்டின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு, அயராது உழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

இந்த மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள இந்திய தூதர்கள், அதிபர் மாளிகையில் நேற்று பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். அப்போது அவர்களுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜூம் உடனிருந்தார்.

#TamilSchoolmychoice

அவர்கள் மத்தியில் பேசிய ரதிபர் பிரணாப் முகர்ஜி, “பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுடன் நல்லுறவை பேணுவதில் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார். கடந்த ஆண்டு மே மாதம் மத்தியில் புதிய அரசு பதவி ஏற்பு விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை அழைத்து, செயல் திறமையையும், துணிச்சலான தலைமையையும் இந்தியா உலகுக்கு எடுத்துக் காட்டியது”.

“அமெரிக்க அதிபர் ஒபாமா, குடியரசு தின விழாவில் நமது மதிப்புக்குரிய விருந்தினராக கலந்து கொண்டார். அவரது இந்திய வருகை கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது”.

“ரஷிய அதிபர் புடின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் இந்தியாவுக்கு வருகை தந்தனர். நமது மக்களின் உணவு பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் நமது சுதந்திரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், உலக வர்த்தக அமைப்பில் உடன்பாட்டினை ஏற்படுத்த முடிந்தது”.

“நமது பிரதமர் தனிப்பட்ட முறையில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து பேசினார். பல தலைமுறைகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் நான் இணைந்து வேலை செய்திருக்கிறேன். இந்திய தூதரகங்களில் தலைமைப்பொறுப்பில் பணியாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல என்பதை நான் அறிவேன்”.

“உங்கள் கஷ்டங்கள் எனக்கு தெரியும். போரினாலும், கொந்தளிப்பினாலும் வெளிநாடுகளில் இந்தியர்கள் பாதிக்கப்படுகிற நிலை உருவானபோது, இந்தியர்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றுவதில் இந்திய தூதரகங்கள் ஆற்றிய பணி மேலானது”.

“அத்தகைய சூழலில் அண்டை நாட்டினருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் செய்த உதவிகளை மறக்க முடியாது. இந்திய தூதர்கள் மிகச்சிறப்பான துணிச்சலுடன், ஆற்றலுடன், மன விருப்பத்துடன் நமது மக்களுக்கு உதவினர்”.

“நாட்டின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அவர்கள் பணியாற்றினர். இந்தியாவின் கொடி, உயரப்பறக்கிற வகையில் தொடர்ந்து நீங்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார்.