Home உலகம் வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு இந்தியா புதிய விசா சலுகை! 

வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு இந்தியா புதிய விசா சலுகை! 

729
0
SHARE
Ad

visaindiaஜெனிவா, பிப்ரவரி 9 – உலக வர்த்தக அமைப்பில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளுக்கு விசா கட்டணங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

மேலும், அந்நாடுகளுக்கு அதிக வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பில், சமீபத்தில் மாநாடு ஒன்று நடைபெற்றது.

வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு பெரிய நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்பது இந்த மாநாட்டின் நோக்கமாக இருந்தது. இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, நார்வே, சுவிட்ஸர்லாந்து உள்பட பல்வேறு நாடுகள் கலந்து கொண்டன.

#TamilSchoolmychoice

அதில் இந்தியாவின் சார்பாக பேசிய பிரதிநிதிகள் கூறியதாவது:- “வளர்ச்சி குறைந்த நாடுகளுக்கு தொழில் முறை விசா, வேலை வாய்ப்பு விசா ஆகியவற்றுக்கான கட்டணங்கள் ரத்து செய்யப்படும்”.

“ஒவ்வொரு ஆண்டும், குறைந்த வளர்ச்சியைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த 1,000 தொழில் வல்லுனர்களுக்கு, தொழில்நுட்ப ஆலோசனை, மேலாண்மை ஆலோசனை, திட்ட மேலாண்மை குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.”

“அந்நாடுகள், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான சந்தை வாய்ப்புகள் அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும், அவர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளும், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வளர்ச்சி குறைந்த நாடுகளின் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர் அபார் கூறுகையில், “விசா கட்டணங்களை ரத்து செய்ய இந்தியா முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா, எங்களுக்கு அறிவித்துள்ள சலுகைகள் பாராட்டத்தக்கவையாக உள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.