Home கலை உலகம் ’நடிப்பு வெறுத்துப்போய்விட்டது’ விரக்தியில் லட்சுமிமேனன்!

’நடிப்பு வெறுத்துப்போய்விட்டது’ விரக்தியில் லட்சுமிமேனன்!

772
0
SHARE
Ad

lakshmi-menon-latest-photos-131394016387 (1)சென்னை பிப்ரவரி 9 – ஒரேபாணியில் நடித்து வெறுத்துப்போய்விட்டது. நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடலாம் போலிருக்கிறது” என விரக்தியுடன் கூறியுள்ளார் நடிகை லட்சுமிமேனன்.

‘கும்கி’ படத்தில் அறிமுகமாக நடிகை லட்சுமிமேனன், சுந்தரபாண்டியன், மஞ்சப் பை, நான் சிகப்பு மனிதன், குட்டிப்புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள ’கொம்பன்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்நிலையில், “ஒரேபாணியில் நடித்து வெறுத்துப்போய்விட்டது. நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடலாம் போலிருக்கிறது” என விரக்தியுடன் கூறினார் லட்சுமிமேனன்.

#TamilSchoolmychoice

இது குறித்து அவர் கூறுகையில், “கோலிவுட்டில் நிறைய படங்களில் வாய்ப்பு வருகிறது. எல்லாமே கிராமத்து பெண் வேடம் அல்லது குடும்ப பாங்கான வேடம். ஒரேபாணியில் நடித்து வெறுத்துப்போய்விட்டது”.

“அதற்கு பதிலாக நடிப்பதிலிருந்து சில காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். சீக்கிரமே நடிப்பிலிருந்து ஓய்வு எடுப்பேன்”. இனிமேல் நடிக்க மாட்டீர்களா?’ என்கிறார்கள்.

“வலுவான கதாபாத்திரத்துடன் வரும் படங்களில் நடிக்க எண்ணி உள்ளேன். அப்போதாவது எனது திறமையை ஓரளவுக்கு வெளிப்படுத்த முடியும். பத்துபேரில் ஒரு நடிகையாக இருக்க நான் விரும்பவில்லை”.

“நடிக்கத் தெரிந்தவர் லட்சுமி மேனன் என பெயர் பெற வேண்டும். அதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. தற்போது பனிரெண்டாவது படிக்கிறேன். அதில் நிறைய மதிப்பெண் வாங்கவேண்டும். நல்லமுறையில் தேர்வு எழுத படிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன்”.

“பட்டப்படிப்பில் ஆங்கில இலக்கியம் படிக்க உள்ளேன். படிக்க ஆர்வம் உள்ளதால் அதை தொடர்வேன். விரைவில் நான் நடித்துள்ள ‘கொம்பன்’ படம் வரவுள்ளது. அதில் மறுபடியும் கிராமத்து பெண் வேடம்தான்” என்றார் லட்சுமிமேனன்.