Home கலை உலகம் லட்சுமி மேனன் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி – பேஸ்புக்கில் தகவல்!

லட்சுமி மேனன் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி – பேஸ்புக்கில் தகவல்!

720
0
SHARE
Ad

Lakshmi+Menonசென்னை, மே 26 – நான் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டதாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகை லட்சுமி மேனன்.

இந்திய அளவில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மாணவர்களுக்கான பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்  சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டன.

அதன்படி கேரளாவிலும்  இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் நடிகை லட்சுமி மேனன் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி குறித்து தனது  ஃபேஸ்புக் பக்கத்தில்,  “கடவுளின் ஆசியாலும், கடின உழைப்பாலும் நான் தேர்ச்சி அடைந்துள்ளேன்”.

#TamilSchoolmychoice

“இந்த நேரத்தில் எனது ஆசிரியர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி!” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியானபோது, லட்சுமி மேனன் தேர்வில் தோல்வியடைந்து விட்டதாக ஒரு செய்தி வெளியாகி, பின்னர் அதனை அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.