Home கலை உலகம் அஜீத்திற்கு தங்கையாக நடிக்கிறாரா லட்சுமி மேனன்?

அஜீத்திற்கு தங்கையாக நடிக்கிறாரா லட்சுமி மேனன்?

662
0
SHARE
Ad

ajith-kumar-so-sorryசென்னை, ஏப்ரல் 17 – அஜீத் நடிக்கவிருக்கும் 56-வது படத்தினை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் அஜீத்துக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கவிருக்கிறார். அண்ணன், தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாக இருக்கிறதாம் இப்படம்.

அஜீத்துக்கு தங்கையாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற தேடுதல் வேட்டை நடைபெற்றது. மேலும் படத்தில் தங்கை வேடம் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாம். இந்த கதாப்பாத்திரத்திற்கு நித்யா மேனன், ஸ்ரீதிவ்யா போன்றவர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்தது.

இறுதியில் இப்படத்தில் லட்சுமி மேனனிடம் தற்போது பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதுகுறித்து லட்சுமி மேனன் கூறுகையில், “ஆம் அந்த வேடத்தில் நடிக்க என்னிடம் கேட்டார்கள்.

#TamilSchoolmychoice

ஆனால் இவ்வளவு சீக்கிரம் என் முடிவை சொல்ல இயலாது. படத்தின் கதையை முழுமையாக கேட்ட பிறகே முடிவை சொல்ல இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் லட்சுமி மேனன்.

சுருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. ’என்னை அறிந்தால்’ தயாரித்த எ.எம்.ரத்னம் இப்படத்தினையும் தயாரிக்கிறார். அடுத்தமாதம் கொல்கத்தாவில் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.