வாஷிங்டன், ஏப்ரல் 17 – அமெரிக்காவின் நியூயார்க் நகர நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதியாக,சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி (43) தேர்வாகி உள்ளார்.
ரிச்மண்ட் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில், மாவட்ட துணை வழக்கறிஞராக பணிபுரியும் ராஜேஸ்வரியை, மேயர் பில் டே பிளேசியா பரிந்துரைத்திருந்தார்.
தன் 16-வது வயது முதல் அமெரிக்காவில் வசிக்கும் ராஜேஸ்வரி கூறியதாவது; “என்னுடைய கனவு பழித்தது. அமெரிக்காவில் உயர் பதவி என்பது எனக்கு மட்டுமல்ல; வெளிநாடுகளில் இருந்து இங்கு வரும் அனைத்து பெண் களுக்கும் உண்டு” என அவர் கூறியுள்ளார்.
வழக்கறிஞராக பணிபுரிந்தபோது, தெற்காசிய நாடுகளை சேர்ந்த குடும்பங்களின், பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளை நடத்தியிருக்கிறார். பரதநாட்டியம் மற்றும் குச்சுப்புடி நடனத்தில் சிறந்தவர் ராஜேஸ்வரி.
இவர் இந்தியாவில் நடைபெறும் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தன் தாய் பத்மா ராமனாதனுக்கு பிறகு, ‘பத்மாலயா டான்ஸ் அகாடமி’ குழுவுடன் இணைந்து நடன நிகழ்ச்சியை வழங்கி வருகிறார்.