Home இந்தியா விஜய் மல்லையாவிடமிருந்து கடனை திருப்பி வாங்க முடியாது – யுனைடெட் வங்கி புலம்பல்!

விஜய் மல்லையாவிடமிருந்து கடனை திருப்பி வாங்க முடியாது – யுனைடெட் வங்கி புலம்பல்!

719
0
SHARE
Ad

kingfisherமும்பை, மே 26 – கிங்பிஷர் நிறுவனத்திற்காக விஜய் மல்லையாவிற்கு அளித்த 400 கோடி ரூபாய் கடனை திருப்பி வாங்க முடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டோம் என யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி பி.ஸ்ரீனிவாஸ் பத்திரிக்கைகளிடம் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

கிங்பிஷர் நிறுவனத்திற்காக 17 வங்கிகள் ரூபாய் 7,500 கோடியை கடனாக கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் அளித்தன. ஆரம்பத்தில் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் கிங்பிஷர் நிறுவனத்திடம் இருந்தாலும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான இழப்பு காரணமாக அந்நிறுவனம் முழுமையாக முடக்கப்பட்டது. இந்நிலையில் கடன் கொடுத்த வங்கிகள் தொடர்ந்து கிங்பிஷரிடம் கடனை திருப்பிக் கேட்டு வந்தன.

இதுவரை சுமார் 1,000 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகியுள்ள நிலையில், மீதி பணம் செலுத்தாமல் கிங்பிஷர், காலம் தாழ்த்தி வந்தது. இந்நிலையில் இது தொடர்பாக யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி பி.ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “கிங்பிஷர் கணக்கில் தற்போது எந்தவிதமான பரிவர்த்தனைகளும் நடக்கவில்லை.இதுவரை எங்களுக்கு எந்த தொகையும் கிடைக்கவில்லை. இனியும் குறித்த காலத்தில் கடன் திருப்பி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டது.”

#TamilSchoolmychoice

“அந்நிறுவனத்தின் கட்டிடங்கள் மற்றும் அடமான சொத்துகளை விற்கும்போது சில கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் இந்த தொகை வட்டிக்கு மட்டுமே சரியாக இருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிங்பிஷர் நிறுவனத்திற்கு 17 வங்கிகள் கடன் கொடுத்திருந்தாலும், யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா தான் பகிரங்கமாக இந்த கருத்தை தெரிவித்துள்ளது. அதேபோல கடனை திருப்பி செலுத்தும் தகுதி இருந்தும் திருப்பி செலுத்தாதவர் பட்டியலில் விஜய் மல்லையாவை முதலில் சேர்த்ததும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியாதான் என்பது குறிப்படத்தக்கது.