Home இந்தியா எடைக்குப் போகும் விஜய் மல்லையாவின் ஜெட் விமானம்!

எடைக்குப் போகும் விஜய் மல்லையாவின் ஜெட் விமானம்!

600
0
SHARE
Ad

Mallya-jet-1மும்பை, ஏப்ரல் 18 – இந்தியாவின் முக்கியத் தொழில் அதிபர் விஜய் மல்லையாவிற்குச் சொந்தமான ஜெட் விமானம் ஒன்றை மும்பை அனைத்துலக விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். விமான நிலையத்திற்கு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சார்பில்  செலுத்த வேண்டிய தொகை நிலுவையில் உள்ளதால், விமானம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கிங்பிஷர் மதுபானங்கள் மூலம் பெரும் வர்த்தகத்தை ஈட்டிய மல்லையாவிற்கு கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சோதனைக் களமாக அமைந்தது. 5000 கோடிக்கு மேல் கடனாளியான மல்லையா, கிங்பிஷர் ஏர்லைன்ஸை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

வங்கிகள், எரிபொருள் நிறுவனங்கள் என பல்வேறு நிறுவனங்களுக்கு நிலுவைத் தொகையை அவர் செலுத்தி வரும் நிலையில் தான்,  மும்பை விமான நிலைய அதிகாரிகள், அவரின் தனித்த ஜெட் விமானத்தைக் கைப்பற்றி உள்ளனர். 11 பேர் அமரும்வகையில் இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தை மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 22 லட்சம் ரூபாய்க்கு வாங்கி உள்ளது.

#TamilSchoolmychoice

இயங்க முடியாத நிலையில் இருக்கும் அந்த பழைய விமானத்தின் பாகங்களை தனித் தனியாக பிரித்து விற்பனை செய்யப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.