Home உலகம் சிரியாவில் 4 நாட்களில் 400 பேரை கொலை செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்!

சிரியாவில் 4 நாட்களில் 400 பேரை கொலை செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்!

581
0
SHARE
Ad

isis34-600பெய்ரூட், மே 26 – சிரியாவில் உள்ள பால்மிரா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 400 பேரை நான்கு நாட்களில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.

ஈராக்கில் மொசுல், ரமாதி உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றிய ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியாவில் உள்ள பழமைவாய்ந்த பால்மிரா நகரை அண்மையில் கைப்பற்றினர்.

தீவிரவாதிகள் அந்நகரை கைப்பற்றிய 4 நாட்களில் பெண்கள், குழந்தைகள் என பொது மக்களையும், ராணுவ வீரர்களையும் கொன்று குவித்துள்ளனர். தீவிரவாதிகள் குடும்பம், குடும்பமாக மக்களை கொலை செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தெருக்களில் மக்களின் உடல்கள் கிடப்பதை காண முடிகிறது. சிலரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டும், சிலரை கத்தியால் குத்தியும், சிலரை தலைகளை துண்டித்தும் கொன்றுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் பலர் பெண்கள், குழந்தைகள் என்று கூறப்படுகிறது.

தீவிரவாதிகள் கடந்த 13-ஆம் தேதி சுக்னா நகரை கைப்பற்றினர். அந்த நகரை பிடித்த 24 மணிநேரத்தில் பால்மிரா நகரை தங்கள் வசப்படுத்தியுள்ளனர். தீவிரவாதிகள் பால்மிரா நகைரச் சேர்ந்த 600 பேரை பிணையக்கைதிகளாக வைத்துள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.