Home கலை உலகம் பீகே படத்தின் தமிழ்-தெலுங்கு மறுபதிப்பில் கமல் நடிக்கிறாரா?

பீகே படத்தின் தமிழ்-தெலுங்கு மறுபதிப்பில் கமல் நடிக்கிறாரா?

493
0
SHARE
Ad

kamaalசென்னை, பிப்ரவரி 10 – இந்தி நடிகர் ஆமீர் கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘பீகே’ படம் தமிழ் மொழியிலும் தெலுங்கு மொழியிலும் வெளிவரவுள்ளது.

அப்படத்தின் தமிழ் பதிப்பில் கமல் ஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘பீகே’ திரைப்படம் ரூ 600 கோடியை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் இந்தி மொழியிலே வெளியாகி, இன்னமும் சில இடங்களில் ‘பீகே’ படம் வசூலை குவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே கமல் ஹாசனை நாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

அப்படத்தின் இயக்குநர், கதாநாயகி போன்ற விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. ஆனால், அமீர் கானின் கதாப்பாத்திரத்திற்கு கமல் தான் சரியான தேர்வு என்பதால் அவருடன் அது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மேலும், ‘பீகே’ படத்தில் நடிக்க கமலும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.