Home உலகம் சீனாவின் இணையக் கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய வர்த்தகம் பாதிப்பு!

சீனாவின் இணையக் கட்டுப்பாடுகளால் ஐரோப்பிய வர்த்தகம் பாதிப்பு!

538
0
SHARE
Ad

China_10பெய்ஜிங், பிப்ரவரி 13 – சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின் தலைமையின் கீழ், சீனாவின் இணையத் தொடர்புகள் அதிக கட்டுப்பாடுகளுடன் கண்காணிக்கப்படுகின்றன. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐரோப்பிய வர்த்தகங்களைக் கண்காணிக்கும் ஆய்வு நிறுவனங்கள், இது தொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வுகளில், சீனாவின் இணையக் கட்டுப்பாடுகள் பற்றி நீண்ட விளக்கங்களைக் கொடுத்துள்ளன.

சமூக ஊடகங்களான ‘பேஸ்புக்’ (Facebook), ‘யூ-டியுப்’ (You tube) போன்றவற்றை முற்றிலும் தடை செய்துள்ள சீன அரசாங்கம், சமீப காலமாக ‘விபிஎன்’ (virtual private networks) இணைப்புகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

#TamilSchoolmychoice

கூகுளின் ‘ஜிமெயில்’ (Gmail) சேவைகளும் கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர் தடைகளை சந்தித்து வரும் நிலையில், இணைய கண்காணிப்புகள் பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சீனாவில் செயல்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக சம்மேளம் கூறுகையில், “சீனாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இணையக்கட்டுபாடுகள் கடந்த ஜூன் மாதத்தை விட 15 சதவீதம் அதிகரித்துள்ளது”.

“இணையத்தின் முக்கிய சேவைகள் தக்க சமயத்தில் தடை செய்யப்படுவது வெறுமனே துரதிருஷ்டவசமானது என்று கூறிவிட முடியாது. அவை வர்த்தகத்தில் பெருஞ்சுமையை ஏற்படுத்துகின்றன.”

“இந்த பாதிப்புகள் சீனாவில் இருக்கும் உலக நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் உள்ளூர் நிறுவனங்களுக்கும் எதிரொலிக்கின்றன” என்று தெரிவித்துள்ளது.

ஜிங்பிங்கின் பதவி ஏற்பிற்கு பிறகு, எல்லை தாண்டிய தகவல் தொடர்புகள் முற்றிலும் தடைப்பட்டுவிட்டன. 2015-ம் ஆண்டின் தொடக்கம் முதல், இணையத்தின் 80 சதவீத சேவைகள் பெரும்பாலும் தடைபட்டுவிட்டன என்று கூறப்படுகிறது.

ஐரோப்பிய நிறுவனங்கள் மட்டுமல்லாது அமெரிக்க நிறுவனங்களின் பெரும்பாலான வர்த்தகம், சீனாவின் இணையத் தடைகளால் கடுமையாக பாதிக்கப்படுவதாக அமெரிக்க வர்த்தக சம்மேளம் தெரிவித்துள்ளது.

அந்நிய முதலீடுகளை பொறுத்தவரை, வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவை அதிகம் விரும்புகின்றன. ஆனால், பாதுகாப்பு காரணங்கள் என்று கூறி அந்நாடு எடுத்துவரும் நடவடிக்கைகளால் பெரும்பால நிறுவனங்கள் அங்கு முதலீடு செய்ய தடுமாறி வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.