Home இயக்கங்கள் உலக தெலுகு மாநாட்டிற்கு மலேசிய தெலுகு சங்கப் பேராளர்கள்

உலக தெலுகு மாநாட்டிற்கு மலேசிய தெலுகு சங்கப் பேராளர்கள்

1031
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 23 – உலகப் புகழ்பெற்ற இந்து சமயத் திருத்தலமான திருப்பதியில் எதிர்வரும் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 29 வரை உலக தெலுகு மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மலேசிய தெலுகு சங்கத் தலைவர் டாக்டர் அட்சயகுமார் தலைமையில் பேராளர் குழுவொன்று புறப்பட்டுச் செல்கின்றது.

ஏறத்தாழ 108 மலேசியப் பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்ற வெளிநாடுகளில் இருந்து சுமார் 10,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து சுமார் 20,000 பேர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்த நிகழ்வைத் தொடக்கி வைக்கின்றார். நிறைவு விழாவிற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருகை தருகின்றார். மேலும் பல தெலுகு பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும், அரசியல் தலைவர்களும் இந்த உலக தெலுகு மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.