முதல் கட்டமாக அந்த இயக்கத்திற்கு 10,000 ரிங்கிட் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்திய சமுதாயத்தில் மாறுதல்கள் ஏற்படுத்தக் கூடிய திட்டங்களை அமுல்படுத்துவதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.
மலேசிய நாட்டின் பழம்பெரும் இந்திய இயக்கங்களுள் ஒன்றான மலேசிய திராவிடர் கழகம் (ம.தி.க) கடந்த காலங்களில் மலேசிய இந்திய சமுதாயத்தில் சமுதாய மாற்றங்கள் நிகழ்வதற்கு பெரும் பங்காற்றியிருக்கின்றது.
கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய திராவிடர் கழகத்தின் 66வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோது டான்ஸ்ரீ கோ சூ கூன் மேற்கண்டவாறு கூறினார்.
பினாங்கு மாநிலத்தில் ம.தி.க சொந்தக் கட்டிடத்தைப் பெறுவதற்கு தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்கும் தான் பிரதமரிடம் பேசியுள்ளதாகவும் கோ சூ கூன் தெரிவித்தார்.
– பெர்னாமா