Home உலகம் தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்காவின் உயரிய விருது

தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்காவின் உயரிய விருது

1018
0
SHARE
Ad

வாஷிங்டன், டிசம்பர் 24 – தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சீனிவாசனுக்கு, அமெரிக்காவின் உயரிய தொழில் நுட்ப விருது அறிவிக்கப்பட்டுள்ளது.புதிய கண்டுபிடிப்புகளுக்கு, அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும், தேசிய தொழில் நுட்ப பதக்க விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தைச் சேர்ந்த சீனிவாசன் உட்பட 12 விஞ்ஞானிகள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு, இந்த விருது, வெள்ளை மாளிகையில் இவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.கண் பார்வை கோளாறை சரி செய்ய உதவும் புற ஊதா கதிர் இயக்க (லேசர்) தொழில் நுட்பத்தை, 1981ம் ஆண்டு, சீனிவாசன் கண்டுபிடித்தார். இவருடைய கண்டு பிடிப்பு, கண் மருத்துவத் துறையில் உதவிகரமாக உள்ளது.

கடந்த, 1950ம் ஆண்டு, சென்னை பல்கலைக் கழகத்தில் படித்தவர் சீனிவாசன். 1956ம் ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில், இயற்பியல் ரசாயனத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.