Home உலகம் நெல்சன் மண்டேலாவிற்கு மேலும் 2 வாரங்கள் சிகிச்சை

நெல்சன் மண்டேலாவிற்கு மேலும் 2 வாரங்கள் சிகிச்சை

1099
0
SHARE
Ad

Nelson Mandelaஜோகன்னஸ்பர்க், டிசம்பர் 25 – தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரும் உலகெங்கிலும் உள்ள சுந்திரப் போராளிகளுக்கு நவீன மகாத்மா காந்தியாக திகழ்ந்து வருபவருமான நெல்சன் மண்டேலாவுக்கு மேலும் 2வார சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக ‌மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.‌

94 வயதான மண்டேலாவுக்கு நுரையீரல் நோய் மற்றும் பித்தகற்கள் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அவர் கிறிஸ்துமஸ் திருவிழாவை மருத்துவமனையில் இருந்து கொண்டாடுவார்.இது குறித்து அந்நாட்டு அதிபர் ‌ஜூமா கூறுகையில், இனவெறிக்கு எதிராக போராடி நோபல் பரிசு பெற்ற மண்டேலாவுக்கு மேலும் இருவார சிகிச்சை உள்ளதால் அவர் மருத்துவமனையில் இருப்பார். அவருக்கு நாங்கள் உதவிகரமாக இருப்போம் என்றார்.