Home நாடு அடுத்த வாரம் பிரதமரைச் சந்திப்பேன்: பழனிவேல்

அடுத்த வாரம் பிரதமரைச் சந்திப்பேன்: பழனிவேல்

548
0
SHARE
Ad

G.Palanivelகேமரன்மலை, பிப் 15 – மஇகாவில் நிலவி வரும் சிக்கல்கள் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பை மீண்டும் சந்திக்க இருப்பதாக டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் தெரிவித்துள்ளார்.  பிரதமருடனான சந்திப்பு அடுத்த வாரம் நிகழும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கேமரன் மலையில் செய்தியாளர்களிடம் பேசிய பழனிவேல், பிரதமருடனான சந்திப்பின்போது மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியமும் தம்முடன் இருப்பார் என்றார்.

“பிரதமருடனான சந்திப்பு மூடிய அறைக்குள் ரகசியமாக நடைபெறும். டத்தோஸ்ரீ சுப்ரமணியமும் உடன் இருப்பார். இதுகுறித்து தற்போது மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாது,” என்றார் பழனிவேல்.

#TamilSchoolmychoice

மஇகா விவகாரம் தொடர்பில் அக்கட்சியின் முதல்நிலை தலைவர்கள் இருவரையும் மீண்டும் சந்திக்க இருப்பதாக நேற்று பிரதமர் நஜிப் கூறியிருந்தார். அது தொடர்பாக கருத்து கேட்டபோதே பழனிவேல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.