21 எகிப்தியர்களின் தலைகளை வெட்டி தங்கள் கொடூரத்தை அரங்கேற்றி உள்ளனர். லிபியாவில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எகிப்தை சேர்ந்த எண்ணற்ற காப்டிக் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து மாயமாகி வந்தனர்.
அவர்களின் கடத்தலுக்கு ஐஎஸ்ஐஎஸ் உள்பட பல்வேறு இயக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டு வந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் இணைய பக்கத்தில் நேற்று ஒரு காணொளி வெளியானது.
அதில் கடத்தப்பட்டதாக கருதப்பட்டு வந்த எகிப்து கிறிஸ்தவர்கள் 21 பேர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் வரிசையாக கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
“நீங்கள் நிகழ்த்தி உள்ள இந்த தவறுக்கான பதிலடியை நாங்கள் விரைவில் கொடுப்போம். உங்களின் தீவிரவாத சித்தாந்தங்களுக்கு, எகிப்து உலக நாடுகளுடன் சேர்ந்து விரைவில் பதிலளிக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த படுகொலைகளுக்கான காரணம் பற்றி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கூறுகையில், “அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதற்கு அவர்களின் மத நம்பிக்கைகள் தான் காரணம்” என்று தெரிவித்துள்ளனர்.
http://youtu.be/FdGPSB6Goo8