Home அவசியம் படிக்க வேண்டியவை ஒபாமாவின் தம்படம் (செல்ஃபி) மோகம்! (காணொளியுடன்)  

ஒபாமாவின் தம்படம் (செல்ஃபி) மோகம்! (காணொளியுடன்)  

484
0
SHARE
Ad

obamaநியூயார்க், பிப்ரவரி 16 – உலகம் முழுவதும் இளைஞர்களிடையே தற்போது நிலவும் செல்ஃபி (தம்படம்) மோகம், அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் விட்டு வைக்கவில்லை.

கண்ணாடி முன் நின்று பல்வேறு முக பாவைனைகளுடன் தன்னைத் தானே படம் எடுத்துக் கொண்ட ஒபாமாவின் காணொளி, கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒபாமாவின் ஆட்சி காலத்தில் மிகப் பெரும் சாதனையாக கருதப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைவதற்கு பிப்ரவரி 15 (நேற்று) தான் கடைசி தேதி. அதனை உணர்த்தவே அவர் இந்த காணொளியை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

obama,அவர் எதிர்பார்த்தது போலவே பல லட்சம் இளைஞர்கள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள குடியரசுக் கட்சியினர், இது குறித்து கூறுகையில்,

“தனது திட்டத்தை பிரபலப்படுத்த ஒபாமா மேற்கொண்ட விளம்பர முயற்சி, அதிபர் பதவிக்கான மரியாதையை கெடுத்துவிட்டது” என்று கூறியுள்ளனர்.

obamaaஎனினும் ஒபாமா அவர்களின் இந்த குற்றச்சாட்டுகளை கருத்தில் கொள்ளவில்லை. மாறாக வருங்கால அதிபர்கள் ஊடகங்களை தவிர்த்துவிட்டு இதுபோன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தங்கள் நாட்டு மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க விரும்பும் ஒபாமா, இதுபோன்ற சமூக ஊடகங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவற்றில் அவர் காட்டும் ஆர்வம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரை எதிரொலிக்கிறது.

ஒபாமாவின் தம்படக் காணொளியைக் கீழே காண்க:

https://www.youtube.com/watch?v=GIwyg-RVZVc