Home நாடு மலேசிய வானொலி தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவர் வி.பூபாலன் காலமானார்!

மலேசிய வானொலி தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவர் வி.பூபாலன் காலமானார்!

1301
0
SHARE
Ad

Poobalanகோலாலம்பூர், பிப்ரவரி 17 – மலேசிய வானொலி (ஆர்.டி.எம்) தமிழ்ப் பிரிவின் முன்னாள் தலைவரும் நாடறிந்த தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவருமான வி.பூபாலன் இன்று அதிகாலை 3.00 மணியளவில் காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை 4.00 மணியளவில் கீழ்க்க்காணும் முகவரியில் நடைபெறும்:

NO: 28, JALAN E2/10,

TAMAN EHSAN, KEPONG

KUALA LUMPUR 

வானொலி தமிழ்ப் பிரிவில் நெடுங்காலமாக பணியாற்றிய காலங்களிலும் பின்னர் அதன் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலங்களிலும் பூபாலன் தமிழ் வானொலி சேவையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை, மேம்பாடுகளைச் செய்திருந்தார்.

#TamilSchoolmychoice

மலேசியத் தொலைக்காட்சியில் ‘தும்புவான் மிங்கு’ என்ற தலைப்பிலான தமிழ் செய்தி-தகவல் நிகழ்ச்சி ஒன்றையும் அவர் நீண்ட காலமாக வழங்கி வந்திருக்கின்றார்.

மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் கவிதைகள், இசைப் பாடலகள், கதைகள், கட்டுரைகள் , நாடகங்கள் என பல தளங்களிலும் பயணித்தவர் – முத்திரை பதித்தவர் பூபாலன்.

கவிஞர் கண்ணதாசனின் பரம ரசிகரான அவர், தான் கொண்டிருந்த இலக்கியத் தாகம் காரணமாக வானொலியில் தொடராக இலக்கிய நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார்.

அவர் தயாரித்து வழங்கிய ‘பூச்சரம்’ இலக்கியத் தொகுப்பு நிகழ்ச்சி பல ஆண்டுகளாக வானொலியில் ஒலிபரப்பாகி அவருக்கென ஓர் இலக்கிய வட்டத்தை உருவாக்கியது.

அன்னாரின் மறைவுக்கு செல்லியல் குழுமம் சார்பாக எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை அவரது குடும்பத்தாருக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.