Home Editor's Pick நூருல் நூகா இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டார் – நூருல் இசா திட்டவட்டம்

நூருல் நூகா இடைத்தேர்தலில் போட்டியிடமாட்டார் – நூருல் இசா திட்டவட்டம்

554
0
SHARE
Ad

NURULகோலாலம்பூர், பிப்ரவரி 17 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் ஓரினப்புணர்ச்சி வழக்கில் சிறைக்கு சென்றுவிட்டதால், அவரது தொகுதியான பெர்மாத்தாங் பாவில் இடைத்தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் அன்வாரின் இரண்டாவது மகள் நூருல் நூகா போட்டியிடுவார் என பரவலாக ஆரூடங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இடைத்தேர்தலில் நூகா போட்டியிடமாட்டார் என அவரது சகோதரியும், பிகேஆர் உதவித்தலைவருமான நூருல் இசா உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

“ஊடகங்கள் என்னிடம் கேட்கிறார்கள். உங்களது சகோதரிகளில் யாராவது பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்களா என்று? நான் கேட்கிறேன் எங்கள் சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் தேர்தலில் போட்டியிடுவீர்களா?” என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை தாமான் செராஸ் ஜெயாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் நூருல் இசா தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

மேலும், அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே புத்ராஜெயாவைக் கைப்பற்ற முடியும் என்றும் நூருல் இசா குறிப்பிட்டார்.