புதுடெல்லி, பிப்ரவரி 18 – இந்தியாவில் மதத் சுதந்திரத்தை பாதுகாப்பதாகவும், எந்தவொரு மதக்குழுவும் மற்ற மதத்தின் மீது வெறுப்புணர்வை தூண்டுவதைத் தனது அரசாங்கம் அனுமதிக்கப்போவதில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கிறிஸ்தவர்கள் முன்னிலையில் பேசிய அவர், மதக்குழுக்கள் உணர்வுகளைத் தூண்டாமல் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் மரியாதை காட்ட வேண்டும் என்றும் கூறினார்.
அண்மைக்காலமாக கிறித்தவ தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களினால், கிறித்தவ சமூகத்தினர் கோபமடைந்துள்ள சந்தர்ப்பத்திலேயே மோடி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கிறித்தவ சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை பாதுகாக்க மோடி தவறிவிட்டார் என்ற விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே மோடியின் கருத்துக்கள் இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.