Home உலகம் 45 பேரை உயிருடன் எரித்து ஐஎஸ்ஐஎஸ் அட்டூழியம்!

45 பேரை உயிருடன் எரித்து ஐஎஸ்ஐஎஸ் அட்டூழியம்!

583
0
SHARE
Ad

பாக்தாத், பிப்ரவரி 19 – ஈராக்கில் உள்ள அன்பர் மாகாணத்தின் அல்–பக்தாதி நகரில் சுமார் 45 பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உயிருடன் எரித்துக் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர்கள் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிராக தாக்குதல் நடத்திய இராணுவ வீரர்கள் என்று கூறப்படுகின்றது.

ஈராக்கின் மேற்கு பகுதியில் உள்ள அன்பர் மாகாணத்தில் பெரும்பாலான நகரங்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து புதிய இஸ்லாமிய தேசம் உருவாக்குவதே அவர்களின் நோக்கமாகும். தங்களிடம் மாட்டிக் கொள்ளும் இராணுவ வீரர்களையும், சிறுபான்மை மக்களையும் ஈவு இரக்கமின்றி தலைதுண்டித்தும், உயிருடன் எரித்தும், கொலை செய்து அதனை காணொளியாக்கி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றனர்.

isis

#TamilSchoolmychoice

இந்நிலையில் அல்–பக்தாதி நகரில் சமீபத்தில் தீவிரவாதிகள் நடத்தி உள்ள கொலை சம்பவம் பற்றி அந்நகர காவல்துறையின் தலைமை அதிகாரி குவாசிம் அல் – ஒபீடி தெரிவித்துள்ளது அனைவரையும் உறைய வைக்கிறது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “அல்–பக்தாதி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள், அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. அயின் அல் – ஆசாத் விமான படை தளத்தை சுற்றியுள்ள நகரங்களையும் அவர்கள் கைப்பற்றி உள்ளனர். அப்போது நடந்த தாக்குதலில் பலர் கடத்தப்பட்டனர். அவர்களில் சுமார் 45 பேரை, தீவிரவாதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர்.”

“இந்த நிலையை உடனடியாக தடுக்க அரசும், அனைத்துலக சமூதாயமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எகிப்து கிறித்துவர்கள் 21 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்ட நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.