Home கலை உலகம் அஜித்தைத் தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து!

அஜித்தைத் தொடர்ந்து விஜய், சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து!

654
0
SHARE
Ad

vijayசென்னை, பிப்ரவரி 21 – சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “புலி” படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது. இந்நிலையில், விஜய் ஒட்டுமொத்த ”புலி” படக்குழுவினருக்கும் பிரியாணி செய்து தன்கையாலேயே பரிமாறவும் செய்திருக்கிறார்.

நடிகர் அஜித் தன் படப்பிடிப்பு முடியும் கடைசி நாள் அன்று,  தன் கையாலேயே பிரியாணி செய்து ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் விருந்து வைக்கும் பழக்கத்தினை உண்டாக்கியவர்.

vijay,,இந்த பாணியை ஒவ்வொரு நடிகரும் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து “புலி” படக்குழுவிற்கே பிரியாணி விருந்து வைத்திருக்கிறார் விஜய்.

#TamilSchoolmychoice

மேலும் ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞருக்கும் தங்க நாணயம் பரிசளித்துள்ளார் இளையதளபதி விஜய். சமீபத்தில் யிவரைத் தொடர்ந்து,

collage_44சிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்த நாள் தினத்தன்று “ரஜினிமுருகன்” படப்பிடிப்பில் பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது படக்குழுவிற்கு பிரியாணி விருந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.