ரூ.66 கோடி சொத்து குவித்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்த காரணத்தால் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை.
மோடியுடன், ஜெயலலிதா (பழைய கோப்புப் படம்)
ஆனாலும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் 67-வது பிறந்தநாளை இன்று திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். பால்குடம், பறவைக்காவடி, அன்னதானம், அலகு குத்தல் என கிராமத்து திருவிழாக்கள் போல பிறந்தநாள் கொண்டாட்டங்களை அதிமுகவினர் கொண்டாடினர்.