Home நாடு “முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்” – பழனிவேலை சாடிய சாஹிட்

“முடிவுகளை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்” – பழனிவேலை சாடிய சாஹிட்

793
0
SHARE
Ad

Ahmad-Zahid-Hamidiகோலாலம்பூர், பிப்ரவரி 24 – மஇகா-வில் நிலவி வரும் உட்கட்சி விவகாரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்ட தீர்மானங்களை பழனிவேல் நிறைவேற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கூறியுள்ளார்.

இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய சாஹிட், கடந்த பிப்ரவரி 4-ம் தேதி கட்சியின் மறுதேர்தலை நடத்துவது குறித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலும், துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் தற்போது பழனிவேல் தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் சாஹிட் குற்றம் சாட்டியுள்ளார்.

“உங்கள் முடிவுகளை அவ்வப்போது மாற்றிக்கொண்டிருப்பதை நிறுத்துங்கள். சங்கங்களின் பதிவிலாகா மீது வழக்குத் தொடுப்பதை விட்டு, பிரச்சனைகளைத் தீர்ப்பது குறித்து யோசியுங்கள். உங்களது ஆதரவாளர்களுக்கும், இந்திய சமுதாயத்திற்கும் நடுநிலமையுடன் இருங்கள்.மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, யார் அதற்கு தகுதியானவர்கள் என்று நினைக்கிறார்களோ அவர்களே கட்சிக்கு தலைமை வகிக்கட்டும்” என்று சாஹிட் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

கட்சிக்குள்ளே இருக்கும் பிரச்சனைகளைக் கூட தீர்க்க இயலாத பழனிவேல் எப்படி இந்திய சமுதாயத்தின் பிரச்சனைகளைத் தீர்க்கப்போகிறார்? என்றும் சாஹிட் கேள்வி எழுப்பியுள்ளார்.

மறுதேர்தல் நடத்துமாறு கூறும் அனைத்து உத்தரவுகளையும் சங்கங்களின் பதிவிலாகா திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, மஇகா வியூக இயக்குநர் ஏ.கே.ராமலிங்கம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

மறுதேர்தல் நடத்துமாறு சங்கங்களின் பதிவிலாகா விடுத்துள்ள உத்தரவுகளை கட்சி ஏற்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட அடுத்த சில நாட்களில் ராமலிங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.