Home அவசியம் படிக்க வேண்டியவை அன்னை தெரசா பற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சுக்கு போப் பிரான்சிஸ் மறுப்பு!

அன்னை தெரசா பற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சுக்கு போப் பிரான்சிஸ் மறுப்பு!

628
0
SHARE
Ad

rss-chief-mohan-bhagwat-600வாடிகன், பிப்ரவரி 25 – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ராஜஸ்தானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ‘அன்னை தெரசாவின் சேவைகள் நல்லதாக இருக்கலாம். ஆனால், சேவை செய்து மதமாற்றம் செய்வதை அவர் நோக்கமாக கொண்டிருந்தார்’’ என்று கூறினார்.

அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கிறிஸ்தவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், அன்னை தெரசா குறித்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசிய கருத்துக்கு போப் ஆண்டவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக வாடிகன் செய்தி தொடர்பாளர் டி.வி.சேனல் ஒன்றில் கூறியதாவது:– ‘‘புனிதமான கிறிஸ்தவ சமய குருவின் சேவையை அரசியலாக்க கூடாது”.

“ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை தெரசா சமுதாயத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் நம்பிக்கை வழிகாட்டியாகவும், கலங்கரை விளக்கமாகவும் திகழ்ந்தார். அவரது வாழ்க்கை உலக மக்களுக்கு ஒரு தூண்டுகோலாக இருந்தது’’ என்று தெரிவித்தார்.