Home நாடு மறைந்த பா.அ.சிவம் நல்லுடல் தகனம்

மறைந்த பா.அ.சிவம் நல்லுடல் தகனம்

736
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 1 – கார் விபத்தில் அகால மரணமடைந்த அமைச்சர் டாக்டர் சுப்ரமணியத்தின் பத்திரிக்கை செயலாளர் பா.அ.சிவம் அவர்களின் இறுதிச் சடங்குகள் இன்று நடந்தேறி அவரின் நல்லுடல் பெட்டாலிங் ஜெயா, கம்போங் துங்கு மின் சுடலையில் தகனம் செய்யப்பட்டது.

அவரது இறுதிச் சடங்குளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் மனித வள அமைச்சர் டாக்டர் சுப்ரமணியம், ம.இ.கா இளைஞர் பகுதித் தலைவர் டி.மோகன், கெராக்கான் கட்சியின் உதவித் தலைவரும், துணை வெளியுறவு அமைச்சருமான செனட்டர் ஏ.கோகிலன் பிள்ளை ஆகியோரும் அடங்குவர்.

சிவத்தின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட டாக்டர் சுப்ரமணியம், சிவம் தனக்கு வாய்த்த நல்ல பணியாளர் என்றும், தனது பத்திரிக்கை செயலாளர் பணியை சிறப்புற ஆற்றினார் என்றும் அவரது மறைவு தனக்கு பேரிழப்பு என்றும் கூறினார்.

#TamilSchoolmychoice

அவரது இழப்பை அனைவரும் உணர்கிறோம். அமைச்சரிடம் பத்திரிக்கை செயலாளராக சேர்வதற்கு முன்னால் சிவம் வானொலி தொலைக்காட்சியில் பணியாற்றிவர் என்பதோடு சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.

நேற்று மலாக்கா செல்லும் நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்களுக்கிடையில் நிகழ்ந்த கார் விபத்தில் காலமான 35 வயதான சிவத்துடன் அவர் பயணம் செய்த காரை ஓட்டிச் சென்ற வாகன ஓட்டுநர் 35 வயதான ஹாஸ்ரின் ஹாசானும் காலமானார்.

மறைந்த சிவத்திற்கு சரஸ்வதி சுகாசினி என்ற மனைவியும், தமிழ் என்ற பெயர் கொண்ட இரண்டு வயது மகனும் இருக்கின்றனர்.