Home GE-13 “எதிர்க்கட்சிகளின் தேர்தல் கொள்கை அறிக்கையை எதிர்கொண்டு பதில் கொடுப்போம்” – நஜிப்

“எதிர்க்கட்சிகளின் தேர்தல் கொள்கை அறிக்கையை எதிர்கொண்டு பதில் கொடுப்போம்” – நஜிப்

636
0
SHARE
Ad

najibபெக்கான், மார்ச் 1 – அண்மையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெளியிட்ட பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையை தேசிய முன்னணி அரசாங்கம் முழுமையாக எதிர்கொண்டு பதில் கொடுக்கும் என்றும், அந்த அறிக்கை மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஓர் அரசியல் கண்துடைப்பு என்றும் பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறினார்.

எதிர்க்கட்சி கூட்டணியின் கொள்கை அறிக்கை அம்சங்கள் செயல்படுத்தப்பட முடியாதவை என்பதை நாங்கள் மக்களுக்கு விளக்குவோம் என்றும் நஜிப் கூறினார்.

“குறிப்பான, தெளிவான விவரங்கள் ஏதுமின்றி வழங்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி   கூட்டணியின் அறிக்கைக்கு நாங்கள் முழுமையாக பதில்களை வழங்குவோம்” என்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது நஜிப் கூறினார்.

#TamilSchoolmychoice

செயல்படுத்தப்பட முடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத அறிக்கை என்று பலராலும் கருத்துரைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து சொல்லும்போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

“உதாரணமாக மின்சாரக் கட்டணத்தையும் தண்ணீர்க் கட்டணத்தையும் குறைப்போம் என்றும் எண்ணெய் விலையைக் குறைப்போம் என்றும் சாலைக் கட்டணங்களை ரத்து செய்வோம் என்றும் இலவச கல்வியை வழங்குவோம் என்றும் கூறும் அவர்கள் தங்களின் ஐந்தாண்டு கால ஆட்சி காலத்தின் இறுதியில் ஒவ்வொரு குடும்பத்தின் வருமானம் 4,000 ரிங்கிட்டாகஉயரும் என்று அவர்கள் கூறி வருகின்றார்கள். ஆனால் அதை எப்படி செய்யப் போகிறோம் என்பதை அவர்கள் கூறவில்லை” என்றும் நஜிப் கூறினார்.